இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது.
இந்நிலையில் மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலாக வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் கோவந்தி மும்பையில் வட கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள வங்கிகள் அனைத்தும் இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கி கிளை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கி கிளை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.