Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு விமானத்தில் கடத்திய “4 அரியவகை குரங்கு குட்டிகள்”…. சுங்க இலாகா அதிகாரிகளின் முடிவு…!!!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் முகமது நஸ்ருதீன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது உடைமைகளை ஸ்கேன் செய்த போது ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது 4 அரியவகை குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முகமது நஸ்ருதீனிடம் விசாரித்த போது, “இந்த குரங்குகள் அபூர்வ வகை ஆகும். இதனை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழும் அவரிடம் இல்லை. இதனால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அறிந்த மதிய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது 2 குரங்கு குட்டிகள் இறந்துவிட்டது. இரண்டு மட்டுமே உயிருடன் இருந்தது. இவை தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் இருக்கும் மழை காடுகளை பூர்விகமாக கொண்ட நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான “பிக்னி மார்மோசெட்” ஆகும். இதனால் அதிகாரிகள் மற்ற இரண்டு குட்டிகளையும் தாய்லாந்து நாட்டில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |