Categories
தேசிய செய்திகள்

மோகன் ரெட்டியின் தாயார் வீட்டுக்காவலில் சிறை வைப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி  சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம்  நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை வழிமறித்த போலீசார் கிரேன் கொண்டு அதனை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் காரை தொடர்ந்து ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சர்மிளா எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் சர்மிளாவிற்கு எதிராக பஞ்சகட்டா காவல் நிலையத்தில் ibc யின் 353, 333, 327 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறை வைக்கப்பட்ட தனது மகளை பார்ப்பதற்காக சர்மிளாவின் தாய் ஒய்.எஸ் விஜயம்மாள் புறப்பட்டிருக்கிறார். ஆனால் அவரையும் தெலுங்கானா போலீசார் வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனர்.

Categories

Tech |