Categories
உலக செய்திகள்

கைக்குழந்தையாக காணாமல் போனவர்… 51 வருடங்கள் கழித்து மீட்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது பராமரிப்பாளர் குழந்தையை கடத்திச் சென்றிருந்தார். பல இடங்களில் தேடி அலைந்த தம்பதி எந்த தகவலும் கிடைக்காததால் கடும் வேதனை அடைந்தனர். இந்நிலையில், சுமார் 51 வருடங்களுக்குப் பின் தங்களின் மகள் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் சார்லஸ்டன் பகுதியில் மெலிசா இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அவர் தங்களின் குழந்தை மெலிசா தானா? என்பதை உறுதிப்படுத்த குழந்தை பிறந்த போது இருந்த அடையாளங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததோடு, டிஎன்ஏ பரிசோதனை  மேற்கொண்டனர்.

அதில், அத்தம்பதியின் மகளான மெலிசா தான் அவர் என்று தெரியவந்தது. அதன் பிறகு இத்தனை வருடங்களாக பார்க்காமல் இருக்க தன் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளை  கண்டு மெலிசா மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு சென்றார். மேலும், மெலிசாவின் தாய் தான் குழந்தையை கொன்று விட்டு கடத்தல் நாடகமாடுகிறார் என்று குற்றச்சாட்டும் இருந்தது. இந்நிலையில் 51 வருடங்கள் கழித்து மகள் திரும்ப கிடைத்ததோடு தன் மீது இருந்த பழியும் நீங்கியதாக மெலிசாவின் தாயார் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Categories

Tech |