அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான தடையை நீட்டித்ததோடு, டிசம்பர் 6-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை கோர்ட்டின் கூறுமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஓபிஎஸ் தரப்பில் டிசம்பர் 13-ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியதை அதை ஏற்காத நீதிபதிகள், இபிஎஸ் தரப்பில் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.