Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது.

தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு சொத்து பாதுகாப்பு குழு தலைவராக அறந்தாங்கி இராமனும், துணைத் தலைவர்களாக பொங்கலூர் நா. பழனிச்சாமி மற்றும் இ.ஏ.பி. சிவாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து செய்தி தொடர்பு தலைவராக டிகேஎஸ் இளங்கோவனும், செயலாளராக பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், இணைச் செயலாளர்களாக தமிழன் பிரசன்னா, சிவ. ஜெயராஜ் மற்றும் கவிஞர் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் திமுக கட்சியின் தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், ப. ரங்கநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதேப்போன்று பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், செயலாளர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |