ஈரோடு அந்தியூர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் காலமானார். 64 வயதான இவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பல மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியது. அப்போது அதிமுக சார்பாக சண்முகவேல் வெற்றி பெற்று அசத்தினார். இதனால் அவருக்கு பல பொறுப்புகளை இபிஎஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
அதிமுக முக்கிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
