Categories
மாநில செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த உடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர், தமிழக முழுவதும் உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள்,நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் கட்டப்பட்டு திறக்காத நிலையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 580 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த உடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |