புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது!
கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதற்குள்ளாக 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்திய இறையான்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்!
மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாகவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதன் மூலமாகவும் வாழ்வாதாரங்களை முடக்கத் துடிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன!”
மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையு, அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்..
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது!(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 28, 2022
மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாகவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதன் மூலமாகவும் வாழ்வாதாரங்களை முடக்கத் துடிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன!(3/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 28, 2022
மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையு, அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4) @DrSJaishankar
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 28, 2022