தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம்.
இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு மாதத்தில் 12 நாட்கள் இந்தியன் 2 திரைப்படத்திற்கும், அதே மாதத்தில் மீதமுள்ள 12 நாட்கள் ஆர்சி 15 திரைப்படத்திற்கும் சங்கர் ஒதுக்கி இருக்கிறார். அதன்படி தான் தற்போது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் தில் ராஜூ சொன்னது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.