சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரோஜா தொடருக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரோஜா சீரியலானது கூடிய விரைவில் முடிவடைய போகிறது.
இதன் காரணமாக ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜா சீரியலின் கடைசி சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கன்னட நடிகையான பிரியங்கா ரோஜா சீரியல் மூலம் தமிழ் கற்றுக் கொண்டதால் தற்போது தமிழிலேயே பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் வந்த எனக்கு தற்போது தமிழ் நல்ல பேச தெரிந்து விட்டது.
கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக எனக்கு நிறைய அன்பு மற்றும் பாசத்தை கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. தொடரில் மட்டுமின்றி உங்கள் மனதிலும் எனக்கு ரோஜாவாக இடம் கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. சரிகமப மற்றும் சன் டிவிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது முடிவு கிடையாது. இது முடிவில்லாத இன்னொரு புதிய ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram