Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குளறுபடி வராது….! அமைச்சர் உறுதி…. மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது இலவச, வேட்டி சேலைகள் வழங்குவது பற்றிய அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் கடந்த வருடம் நடந்த குளறுபடிகள் இந்த வருடம் நடைபெறாது என அமைச்சர் சக்கரபாணி உறுதி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எவ்வித ஆலோசனைக் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை. அதுகுறித்து CM அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பின்னர் அறிவிப்பார். சென்ற ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பு குறித்து வந்த குற்றச்சாட்டுகளில் 2 தான் நிரூபிக்கப்பட்டது என்றார்.

Categories

Tech |