தமிழ் சினிமாவில் வெளியான மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கரிகாலன் மற்றும் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் துபாயில் இருந்த சமயத்தில் இயக்குனர் கிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவீரர் பிறந்த நாளில் இசை வெளியீட்டு விழாவில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். குறுகிய காலத்தில் தான் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தப் படத்தில் என்னுடைய மகனின் நண்பர் ஈஸ்வர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். என்னுடைய மகனும் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருந்தாலும் நான் என் மகன் நடிகராக வரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். அதன் பிறகு தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு இங்கே நல்ல தளம் கிடைப்பதில்லை. ஒரு வருடத்திற்கு 2500 மாணவர்கள் விஸ்காம் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு உதவ வேண்டிய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டமாக கூறினார். மேலும் நடிகர் கருணாஸ் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.