Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ஆன்மிக சுற்றுலா போக விருப்பம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க…..!!!!

ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும்.

ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் தேதி துவங்குகிறது. பயணிகள் இரவு தங்குவதற்கு/காலை ப்ரெஷ் ஆவதற்காக பட்ஜெட் ஹோட்டல் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஐஆர்சிடிசி இத்தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த யாத்ரா பயணக் கட்டணம் ஸ்லீப்பர் கிளாஸ்-ரூபாய்.15,770 (நபர் ஒன்றுக்கு), 3 ஏசி கம்பர்ட் – ரூபாய்.18,575 (நபர் ஒன்றுக்கு) ஆகும்.

ரயில் வாயிலாக அழைத்துச்செல்லப்படும் பயணிகள், வாகனம் மூலம் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 3 வேளையும்  அவர்களுக்கு உணவு வழங்கப்படும். அத்துடன் காபி, டீயும் பயணிகளுக்கு கொடுக்கப்படும். இந்த யாத்ராவிற்கு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வமான தளத்திற்கு சென்று நீங்கள் புக் செய்யலாம்.

Categories

Tech |