சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் சிவாயநகர் முதல் கிராஸ் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று இரவு நேரத்தில் பூத்தது. ஒரே செடியில் பூத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பூக்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். சிலர் பூவுக்கு பழம், தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
ஒரே செடியில் பூத்த 10-க்கு மேற்பட்ட “பிரம்ம கமலம் பூக்கள்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
