Categories
மாநில செய்திகள்

சிறைச்சாலையில் இப்படி ஒரு நவீன வசதி….. விரைவில் அனைத்து சிறைகளிலும்…. வெளியான அறிவிப்பு…!!!!

மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இன்டர்காம் மூல உரையாடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல திட்டங்களையும் சிறை துறை அமல்படுத்தி வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனப்படுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை, திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் – குடும்பத்தினர் சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடி தடுப்பு அமைத்து போன் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு தற்போது செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்கள் கைமாறுவது தவிர்க்கப்படும் எனவும், இந்த வசதி விரைவில் அனைத்து சிறைகளிலும் அமல்படுத்தப்படும் எனவும் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளர்.

Categories

Tech |