குரங்குகள் மனிதர்களை துன்புறுத்தும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு நாய் நிம்மதியாக படுத்து இருக்கும் நேரத்தில் குரங்கு வந்து அதனை தொல்லைபடுத்தும் வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாக பரவி வருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் நிம்மதியாக படிகளில் படுத்து இருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கு வரும் குரங்கு அதனை தொல்லை செய்கிறது.
View this post on Instagram
அத்துடன் குரங்கு நாயின் காலை இழுக்க ஆரம்பித்து பிறகு கன்னத்தில் அடிக்கிறது. குரங்கின் செயலை கண்டு அந்நாய் மிகவும் கடுப்பாகி, விட்டால் அழுது விடும் என்பது போன்ற ரியாக்ஷனை கொடுக்கிறது. இதனிடையில் நாயை குரங்கு சீண்டுவதைப் பார்க்கும் மற்றொரு நாய், அதனைக் காப்பாற்ற அதன் அருகில் வருகிறது. அப்போது குரங்கு காப்பாற்றவந்த நாயையும் தாக்கி விடுகிறது. இதனால் காப்பாற்ற வந்த நாய் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடத் தொடங்குகிறது.