இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மொத்தமாக அனுப்பப்படும் பென்சில்களை தனித்தனியாக பேக்கிங் செய்து அனுப்ப பெண்கள் தேவைப்படுகிறார்கள். மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற விளம்பர பேனர் சமீப காலமாக வாட்ஸப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதைக் கண்டு தொடர்பு கொண்ட பல பெண்களிடம் அந்த கும்பல் செயல்பாடு கட்டணமாக 600 ரூபாய் கேட்கிறது. அதன் பின் அவர்கள் மொபைல் எண்ணை பிளாக் செய்து விடுகிறார்கள். எனவே இது போன்று தொடர்ந்து நடப்பதால் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.