Categories
மாநில செய்திகள்

கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துறாங்க!…. புகழேந்தி சரமாரி பேச்சு….!!!!

கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும்.

இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC சரியாக செயல்படவில்லை என எடப்பாடி கூறுவது சரி. ஏனெனில் வேலுமணி, கொடநாடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அப்படியே இருக்கிறது. ஆனால் அவர்களை கைதுசெய்யவில்லை. அதனால் தான் விடியா அரசு என இந்த அரசை பேசுகின்றனர். ஜெயலலிதாவின் வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகத்திற்கு என்ன தெரியும். பழனிசாமி தலைமையில் எதுவும் நடக்காது, பூச்சாண்டி காட்டுகின்றனர். பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியானது மீட்டெடுக்கப்படும். இதனிடையில் பணம் இருப்பதற்காக பழனிச்சாமி பின்னால் சுற்றுகின்றனர். கரூர் விரைவில் கண்டிப்பாக அண்ணன் தலைமையில் அ.தி.மு.க கோட்டையாக மாறும் என புகழேந்தி பேசினார்..

Categories

Tech |