இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து ஆஸ்திரா ஹிந்த் எனப்படும் ராணுவ கூட்டு பயிற்சியை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும் நிலையில், நடப்பாண்டில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன் துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்தில் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த 13 படைப்பிரிவு வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதேபோன்று இந்தியாவில் டோக்ரா படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாலைவனத்தில் பயிற்சி நடைபெற இருப்பதால், நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உள்வாங்கி ஒன்றாக இணைந்து செயல்படும் நடைமுறையை மேம்படுத்துவதே பயிற்சியின் நோக்கம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது தான் இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் பிரிவுகள் பங்கேற்கும் முதல் கூட்டு பயிற்சி ஆகும்.