தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.