Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு பொருட்களை கவனத்தில் வைத்து மெகா உணவு திருவிழாவை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் நடத்துகின்றது. இதற்கு மிகப்பெரிய விளம்பரம் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மெகா உணவு திருவிழாவுக்கு லோகோ மற்றும் டேக் லைன் தயார் செய்வதற்கு மத்திய அரசும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகமும் போட்டி நடத்துகிறது.

அந்த போட்டியில் உணவு திருவிழாவுக்காக லோகோவும் டேக் லைனும் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தயாரித்த லோகோ மற்றும் டேக் லைன் அரசால் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் உங்களின் லோகோ மற்றும் டேக்லைனை சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்த லோகோ மற்றும் டேக் லைனை https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் சேர்த்து உங்களின் சுய விவரங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும். ஒரு நபரால் ஒரு லோகோ மற்றும் ஒரு டேக் லைன் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |