தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (28.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை
வடக்கு மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதூர் கற்பகநகர் 4-14 தெருக்கள், புதூர் கார்த்திக் தியேட்டர் பகுதி, அழகர்கோவில் மெயின் ரோட்டின் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி
குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட கிள்ளியூர், புதுக்கடை, கொல்லங்கோடு, இரவிபுதூர்கடை, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் கம்பிளார், வலியவிளை, வட்டக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்தளவாடங்கள் மாற்றும் பணிகள் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி, கொட்டாரம், கோட்டார், ஈத்தாமொழி மின் வினியோக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது . அதன்படி இன்று கோம்பவிளை, கோவில் விளை, இலந்தையடிவிளை, கீழமணக்குடி, வடக்குசூரங்குடி, தட்டான்விளை, வள்ளுவர் காலனி, வத்தக்காவிளை, கீரிவிளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், கோட்டார் மின்பாதையில் இளங்கடை, ராஜபாதை, பள்ளிதெரு, வையாளிவீதி, வேம்படிதெரு, கடைத்தெரு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கொட்டாரம், மீனாட்சிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.