தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ராஜமவுலி அடுத்ததாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அமெரிக்கா சென்ற ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை அங்கு திரையிட்டு காட்டியதோடு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல LA டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ராஜமவுலியின் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ராஜமவுலியின் போட்டோவோடு அவருக்கு ஆஸ்கர் விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பத்திரிகை புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram