Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றபோது… எதிரே வந்த லாரி மோதி… என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்…!!!

வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் வடலூர் அய்யன் ஏரி அருகே சென்ற போது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுகுமார் மற்றும் சந்திரகலாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகலா பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது சுகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |