Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள்”…. நடிகர் யோகி பாபு நன்றி…!!!

இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு நன்றி தெரிவித்திருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, இன்று யோகி படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகின்றது.

என்னை பெரிய திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். பெரிய திரைக்கு வருவதற்கு முன்பாக சின்ன திரையில் ஆறு வருடங்கள் எனக்கு பெருந்துணையாக இருந்த ராம் பாலா என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற லவ் டுடே திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளது. நான் விரைவில் பிரபாஸ் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றேன். சினிமாவில் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த திரைத்துறையினர், ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

 

Categories

Tech |