டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் youtube இல் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றின் நடுவே நடிகர் சசிகுமார் யூடியூப் பிரபலம் ஜிபி முத்துவுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது ஜிபி முத்துவிடம், ‘உங்கள் கையில் ஒரு சேனல், சோசியல் மீடியா உள்ளதால் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்கள் மூலம் பேசப்படும் கருத்துக்கள் பலரை சென்றடைகிறது. எனவே அதில் பாசிடிவான நிறைய விஷயங்களை சொல்லுங்கள். மற்ற எதிர்மறை விஷயங்களை கவனமாக தவிர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.