உலகின் வலிமையான அணுசக்தி நாடாக வட கொரியா இருக்கும் என தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுகுறித்து வடகொரிய தலைவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை மிகவும் வலுவான மூலோபாய ஆயுதம் ஆகும்.
இது வடகொரியாவின் உறுதியையும், இறுதியில் உலகின் வலிமையான ராணுவத்தையும் உருவாக்கும் திறமை கொண்டது. இந்நிலையில் வடகொரியா விஞ்ஞானிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இதனால் உலகின் வலிமையான அணுசக்தி நாடாக எங்கள் நாடு இருக்கும் என அவர் கூறியுள்ளார்.