Categories
தேசிய செய்திகள்

“பாஜக-காங்கிரஸ் கடும் மோதல்”…. 5 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தாக்குதல்…. 30 பேர் பலத்த காயம்….. தொடர் வன்முறையால் பரபரப்பு….!!!!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோமதி மாவட்டத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை பாஜகவினர் அடித்து நொறுக்கியதாக அந்த கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 5 நாட்களில் 5 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்ற போது போலீசார் அவர்களை பாதியிலே தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மாநிலத்தில் தொடர்ந்து இப்படி வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |