Categories
தேசிய செய்திகள்

அந்தமான் விமான நிலையத்தில் காலாவதியான கொரோனா பயண கட்டுப்பாடுகள்….. பயணிகள் கடும் அவதி…..!!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் செல்லும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள், 48 மணி நேரம் முதல் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் பரிசோதனை ரிப்போர்ட்டை காண்பிக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் விமானத்திலிருந்து இறங்கியதும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டணம் செலுத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தெற்கு அந்தமான் துணை கமிஷனர் சுனீல் அஞ்சிபாகா உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சஞ்சய் என்ற பயணி காலாவதியான பயண கட்டுப்பாடுகளினால் எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது என்றும், கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் லடாக் யூனியன்பிரதேசத்தில் உள்ள விமான நிலையம், இண்டிகோ விமான நிலையம், நாகலாந்து மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையங்களில் இன்றுவரை காலாவதியான கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |