திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர் பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது தற்போது கவனம் பெற்றுள்ளது. அவர் ஒற்றை செங்கலை உருவி எடுத்து, டெல்லி செங்கோட்டையை அதிரவைத்த எழுச்சித் தீ, இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளை, நாளைய தமிழகம் ஒளிர வேண்டும் என்று நம்பிக்கையோடு இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற நங்கூரம்.
அவருக்கு என் சார்பாகவும் தென் மண்டல சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் எதிர்பார்க்கவும் இருக்கிறது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நேற்றைய பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.