தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளங்கோ குமாரவேல். இவர் அபியும் நானும், சர்வம் தாளமயம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் இ ளங்கோவிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு சென்றனர்.
இது தொடர்பாக பட்டினம் பாக்கம் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இளங்கோவிடம் செல்போனை பறித்த 2 நபர்களை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போனையும் காவல்துறையினர் மீட்டதோடு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.