Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்மோனியம் வாசித்த இசை புயல்….. இசையில் மயங்கி கும்புடு போட்ட ஐஸ்வர்யா…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏ ஆர் ரகுமான் ஆர்மோனியம் வாசித்ததை கேட்டு கும்பிடு போட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இருவரும் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியும் இவர்கள் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் அவர்கள் இருவருமே அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்கா ப்ரடெக்ஷன் தயாரிப்பில் “லால் சலாம்” என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்திற்கான ஆடிஷன் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏஆர் ரகுமான் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹார்மோனியா பெட்டியில் பழைய மியூசிக் ஒன்றை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வாசிக்கின்றார். இதனைக் கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏஆர் ரகுமான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு நின்னுக்கோரி வரணும் காமெடிதான் ஞாபகத்துக்கு வருவதாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இன்னும் சில ஏ ஆர் ரகுமான் அருகில் அமர்ந்து கொண்டு இப்படி ரியாக்ஷன் கொடுப்பதற்கு ஒரு தைரியம் தான் வேணும் என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Categories

Tech |