Categories
இந்திய சினிமா சினிமா

“இனி ராஷ்மிகாவுடன் நடிக்க மாட்டேன்”….. மறைமுகமாக சொன்ன காந்தாரா பட நடிகர்….. வலுக்கும் எதிர்ப்பபால் பரபரப்பு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகா காதலில் விழுந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து ராஷ்மிகா விலகி விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கிரிக் பார்ட்டி படத்தை பற்றி பேசிய ராஷ்மிகா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரக்ஷித் செட்டியை பற்றி பேசவில்லை.

இவரின் அணுமுறை பலருக்கும் பிடிக்காத சூழ்நிலையில், ரிசப்‌ செட்டி இயக்கத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில் கன்னட சினிமாவில் ராஷ்மிகா மந்தனைவை அறிமுகப்படுத்தி வைத்ததே ரிஷப் செட்டி தான். இப்படி அடுத்தடுத்து பல சர்ச்சைகள் வெடித்ததன் காரணமாக இனி கன்னட சினிமாவில் ராஷ்மிகா நடிக்க கூடாது என கன்னட ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

அதோடு கன்னட தயாரிப்பாளர்கள் சங்கமும் ராஷ்மிகாவை கன்னட படங்களில் நடிக்க வைக்க கூடாது என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரிஷப் செட்டி பேட்டியில் ராஷ்மிகாவை தனக்கு பிடிக்காது என மறைமுகமாக கூறியது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பேட்டியின்போது உங்களுடைய படங்களில் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி மற்றும் சமந்தா ஆகியோரில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு நடிகர் ரிஷப் செட்டி என்னுடைய படங்களில் புது முகங்களை தான் தேர்வு செய்வேன் என்று கூறினார். அதோடு சமந்தா மற்றும் சாய் பல்லவி இருவரும் நேச்சுரலான நடிகைகள் என்றும், சமந்தா விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் எனவும் கூறினார். மேலும் நடிகர் ரிஷப் ராஷ்மிகாவின் பெயரை கூறாதது அவர் மீதான கோபத்தை காட்டுவதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ரஷ்மிகாவின் படங்கள் எதுவும் கன்னட சினிமாவில் வெளியாகாது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |