தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் வராது. நவம்பர் 28 முதல் டிச., 31 வரை இந்த முகாம்கள் நடைபெறும். இதனால் டிச.,31 தேதி வரை மக்கள் வழக்கம்போல் மின் கட்டணம் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.