Categories
தேசிய செய்திகள்

“நாட்டு நலனில் பாஜகவுக்கு மட்டும் தான் அக்கறை”….. அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனிக்குழு…. ஜே.பி நட்டா உறுதி….!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. இந்த அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டுபிடிக்க தனியாக ஒரு குழு அமைக்கப்படும்.

அதன்பிறகு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் சமூக விரோதிகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் அனைவரும் போலி வாக்குறுதிகளை அளிக்கின்றனர் என்றும், பாஜக மட்டுமே நாட்டின் அளவில் அக்கறை கொண்டிருக்கிறது எனவும், ஜே.பி நட்டா கூறியதோடு வருகிற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் கூறினார்.

Categories

Tech |