தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் மின் இணைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி உள்ளிட வேண்டும். ஒருவேளை உங்களது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் முதலில் mobile number registration என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஓடிபி பதிவிட்டவுடன் கேப்சா குறியீடு கேட்கும். அதனை பதிவிட்டு ஆதார் விவரங்களை பதிவிட்ட பிறகு submit கொடுத்தவுடன் உங்களின் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண் இணைக்கப்பட்டு விடும்.