தி.மு.க ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும். உடனடியாக நோய் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளை காத்திடவேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை முயற்சி நடக்கிறது. ஆகவே மருந்து தட்டுப்பாடு என்று கூறுவோர் மருந்து கிடங்குகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.