Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி… போலீஸ்அதிரடி…!!!!

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சோலையூர் – வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையன்  அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடமிருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

Categories

Tech |