Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகை!… குரங்கு செய்த அட்டுழியம்….. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!

பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது.

காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் நிலவி வந்தது. காலியா இதுவரையிலும் 250க்கும் மேற்பட்டவர்களை தாக்கி காயப்படுத்தி இருக்கிறது. இதனால் வனத்துறையானது அக்குரங்குக்கு தண்டனை கொடுத்தது. கான்பூரிலுள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் கூண்டில் காலியா வைக்கப்பட்டது. பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகையை செய்து விட்டு, முணு முணுப்பது அந்த குரங்கின் பழக்கங்களில் ஒன்றாகும். மேலும் அந்த குரங்கு அவர்களை தாக்கி காயப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தது.

Categories

Tech |