ஷோபியானில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு போலீசார் மற்றும் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து துரிதமுடன் செயல்பட்டு குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததால் பெரும் அளவிலான சதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ள நஷ்ரி நாகா என்னும் பகுதி அருகே ஒரு மினி பஸ்சை மறித்து சோதனை மேற்கொண்டதில் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒட்டும் வகையிலான வெடிகுண்டுகளின் ஆபத்து பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு டிரக் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறித்தியுள்ளனர்.