Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி கடமான் பலியான வழக்கு…. வாலிபருக்கு நூதன தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரான்குளத்தில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த கடமான் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியில் வசிக்கும் கருப்புதுரை(23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கருப்புதுரை ஜாமீன் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் கருப்புதுரைக்கு ஜாமீனும், நூதன தண்டனையும் வழங்கினார். அதன்படி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கருப்பு துரை மாவட்ட வன அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இதனையடுத்து வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளுக்கு ஏற்படும் நன்மைகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து வனத்துறையினருடன் இணைந்து கருப்புதுரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |