தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் அஜித் ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாயகராக இருக்கும்போது பல பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம்.
அப்போது நடிகர் அஜித் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவாராம். அப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசிய போது ஒரு சமயம் அஜித் சர்ச்சையில் சிக்கிக்கொண்டாராம். இதன் காரணமாக நடிகர் அஜித்தை ரஜினி அழைத்து பொது இடங்களில் வெளிப்படையாக பேசுவதை தவிர்த்து விடுங்கள். அதுதான் திரையுலகை சேர்ந்த நமக்கு மிகவும் நல்லது அட்வைஸ் செய்துள்ளாராம். இதன் காரணமாகத்தான் நடிகர் அஜித் பொதுவெளிகளில் பேசுவதை குறைத்து கொண்டதோடு, பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது.