Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகாவுக்கு கன்னட படங்களில் நடிப்பதற்கு அதிரடி தடை?….. வைரலாகும் டுவிட்டர் பதிவு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தை நடிகர் ரக்ஷித் செட்டி தயாரித்து நடித்திருந்தார்.

இந்த படத்தை காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். இந்த படத்தின் போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்படவே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ரஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய முதல் படமான க்ரிக் பார்ட்டி பற்றி பேசினார். அப்போது நடிகர் ரக்ஷித் செட்டியின் பெயரை ராஷ்மிகா சொல்லவில்லை.

இது தற்போது கன்னட ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தன்னை வளர்த்துவிட்ட கன்னட சினிமாவை ராஷ்மிகா மறந்துவிட்டு மற்ற மொழி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கன்னட சினிமாவில் நடிகை ரஷ்மிகாவின் படத்திற்கு நிரந்தர தடை போடலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து ரஷ்மிகா நடிப்பில் வெளியாகும் வாரிசு மற்றும் புஷ்பா 2 திரைப்படங்கள் கன்னட சினிமாவில் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இது ராஷ்மிகாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான டுவிட்டர் பதிவு ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |