Categories
அரசியல் தேசிய செய்திகள்

கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியல்… ஆம் ஆத்மி கட்சி முதலிடம்…!!!

குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 167 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. அதில் 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமான ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ள விவரங்களின்படி முதல் கட்ட மொத்த வேட்பாளர்களில் 21 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும் 13% வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகளும் பதிவாகி இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 89 இடங்களில் 88 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றது. இதில் 36 விழுக்காடு பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறியுள்ள ஏடிஆர் மொத்த வேட்பாளர்களில் அதிக குற்ற வழக்குகள் உள்ள கட்சி ஆம் ஆத்மி கட்சி என குறிப்பிட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியின் 35 வேட்பாளர்கள் மீதும் குற்றவழக்குகள் உள்ளதாகவும் பாஜகவை பொறுத்தவரை 14 சட்டமன்ற வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஏ.டி.ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |