முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி..
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களை குவித்து வந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் 24 ஆவது ஓவரில் சுப்மன் கில் 50 (65) ரன்னிலும் அதற்கடுத்த ஓவரில் தவான் 72 (77) ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ரிஷப் பண்ட் 15 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இந்த ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. சஞ்சு சாம்சன் 36 ரன்களில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷ்ரேயஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 80 (76) ரன்களில் ஆட்டமிழந்தார்.. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 16 பந்துகளில் 37* ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 மற்றும் டெவான் கான்வே 24 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் பொறுப்புடன் ஆடிய நிலையில், மறுபுறம் டாம் லேதம் சற்று அதிரடியை காட்டினார். இந்த ஜோடியை இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 47. 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94* ரன்களுடனும், டாம் லேதம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 145* ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1 : 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி ஹாமில்டனில் செடான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Tom Latham and Kane Williamson master a memorable chase against India ⭐
Watch the #NZvIND ODI series LIVE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺
📝 Scorecard: https://t.co/eVO5qCY6fe pic.twitter.com/GBEpDunT9C
— ICC (@ICC) November 25, 2022