Categories
மாநில செய்திகள்

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா… கொள்கைக்காக எதையும் இழக்கலாம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது.

மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது  அப்பாவை போல சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வரக்கூடியவர் தான். திராவிட இயக்கம் என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல் அறிவியக்கம். நம்முடைய அறிவியல் கோட்பாடுகளை தெரிந்து கொள்ள உதவும் டி.கே சீனிவாசனின் நூல்களைப் போல ஏராளமான நூல்கள் வரவேண்டும். மேலும் தி.மு.க இளைஞரணி சார்பாக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது. அதோடு அந்த பணி முடியவில்லை.

மேலும் தொடர வேண்டும் எனவும் தி.மு.க தலைவர் என்ற முறையில் எனது அன்பான வேண்டுகோளாக அல்ல கட்டளையாக பிறப்பிக்கின்றேன். மேலும் பாசறை கூட்டங்களில் பங்கெடுக்கும் இளைஞர்கள் திராவிட இயக்கம் சார்ந்த புத்தகங்களை எழுதி படிக்க வேண்டும். கொள்கை இருந்தால் தான் கட்சி. கட்சி இருந்தால் தான் ஆட்சி என்பதில் நான் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். மேலும் டி.கே சீனிவாசன் போன்ற எழுத்தாளர்கள் தான் கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் செய்யலாம். எதையும் இழக்கலாம். இது போன்ற கொள்கை உரத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் தான் டி.கே சீனிவாசன்  என கூறியுள்ளார்.

Categories

Tech |