தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எர்ணாகுளம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை பகல் 1:10க்கு புறப்படும் ரயிலானது செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கும் தாம்பரம் வந்தடைந்து மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 1:40 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை 12 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.
நவம்பர் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த ரயில் சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிபுலியூர் வழியாக இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.