மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் பயன்பாடு விகிதாசாரத்தை பொருத்தவரையில் தற்போது 34 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அவை அடுத்த 10 வருடங்களில் 38 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே போல் 2031-2032 ஆம் வருடம் தமிழகத்தின் மின் தேவை 1 லட்சத்து 75 ஆயிரத்து 391 மில்லியன் யூனிட் ஆக இருக்கும் எனவும் உச்ச தேவை 26 ஆயிரத்து 662 மெகாவாட்டாக இருக்கும். 2021 – 2022 ஆம் வருடத்தில் 16 சதவீதமாக இருக்கும் விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரம் 2031- 2032 ஆம் வருடத்தில் 13 சதவீதமாக இருக்கும். இதனையடுத்து வர்த்தக பயன்பாட்டை பொருத்தமட்டில் 2021 – 2022 ஆம் வருடத்தில் 8 சதவீதமாகவும் 2031 – 32 ஆம் வருடத்தில் 21 சதவீதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது, 2022 – 2023 ஆம் வருடத்திற்கான எரிசக்தி துறையின் கொள்கை குறிப்பின்படி வழக்கமான மூலங்களிலிருந்து மொத்த நிறுவப்பட்ட திறன் 16,652.20 மெகாவாட்டாகும். தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சொந்த அனல் மின் திறன் 4,320 மெகாவாட் மற்றும் மதியம் மின் உற்பத்தி நிலையங்கள் 6,972 மெகாவாட் ஆகும். 2030 – ஆம் வருடத்திற்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.