Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் புது படத்தின் சூட்டிங் நிறைவு…. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்….!!!!

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை டிரைக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் கடந்த 2017ம் வருடம் வெளியாகிய “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில் “பத்து தல” படத்தின் சூட்டிங் இப்போது நிறைவடைந்து உள்ளது. இதை கேக் வெட்டி படக் குழு கொண்டாடி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிம்பு தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |